Friday, August 31, 2007
ஸ்லோக்ஷ்ணா ராஜ்காரியரைக் கொன்றது ஏன்?
அந்தக்காலம்
ப்ரிய ஸ்நேகி ஸ்லோக்ஷ்ணா ராஜ்காரியர்
என்று பஸ் ரிக்கெற்றில் கவிதை எழுதிய
சுமனேஸ்வரனை மெற்றோவில் கண்டேன்
இந்தக்காலம்
அன்புடன் பண்புடன் தோழி சுலோசனா இராசகாரியர்
என்று லப்ரொப்பில் கவிதை தட்டிக்கொண்டிருந்தான்.
என்ன மச்சான்
ஸ்லோக்ஷ்ணா ராஜ்காரியருக்கு என்னடா ஆச்சுது?
நவீனம் பிந்தின கவிதைக்கு
முந்தின மாதிரி கிரந்தம் இருக்கப்படாது
ஆனா நிழல் கனக்கிற மாதிரி
இருண்மை வேணும் தோழர்
பின்நவீனத்தோழிக்கு என் வந்தனம் சொல்ல
வதனம் காணமுடியாத மாதிரிக்கு
மெற்றோவுக்குள்ளை அப்பின இருட்டு
இருளம்மையே இதோ வணக்கம்!!
ப்ரிய ஸ்நேகி ஸ்லோக்ஷ்ணா ராஜ்காரியர்
என்று பஸ் ரிக்கெற்றில் கவிதை எழுதிய
சுமனேஸ்வரனை மெற்றோவில் கண்டேன்
இந்தக்காலம்
அன்புடன் பண்புடன் தோழி சுலோசனா இராசகாரியர்
என்று லப்ரொப்பில் கவிதை தட்டிக்கொண்டிருந்தான்.
என்ன மச்சான்
ஸ்லோக்ஷ்ணா ராஜ்காரியருக்கு என்னடா ஆச்சுது?
நவீனம் பிந்தின கவிதைக்கு
முந்தின மாதிரி கிரந்தம் இருக்கப்படாது
ஆனா நிழல் கனக்கிற மாதிரி
இருண்மை வேணும் தோழர்
பின்நவீனத்தோழிக்கு என் வந்தனம் சொல்ல
வதனம் காணமுடியாத மாதிரிக்கு
மெற்றோவுக்குள்ளை அப்பின இருட்டு
இருளம்மையே இதோ வணக்கம்!!