Friday, August 31, 2007
ஸ்லோக்ஷ்ணா ராஜ்காரியரைக் கொன்றது ஏன்?
அந்தக்காலம்
ப்ரிய ஸ்நேகி ஸ்லோக்ஷ்ணா ராஜ்காரியர்
என்று பஸ் ரிக்கெற்றில் கவிதை எழுதிய
சுமனேஸ்வரனை மெற்றோவில் கண்டேன்
இந்தக்காலம்
அன்புடன் பண்புடன் தோழி சுலோசனா இராசகாரியர்
என்று லப்ரொப்பில் கவிதை தட்டிக்கொண்டிருந்தான்.
என்ன மச்சான்
ஸ்லோக்ஷ்ணா ராஜ்காரியருக்கு என்னடா ஆச்சுது?
நவீனம் பிந்தின கவிதைக்கு
முந்தின மாதிரி கிரந்தம் இருக்கப்படாது
ஆனா நிழல் கனக்கிற மாதிரி
இருண்மை வேணும் தோழர்
பின்நவீனத்தோழிக்கு என் வந்தனம் சொல்ல
வதனம் காணமுடியாத மாதிரிக்கு
மெற்றோவுக்குள்ளை அப்பின இருட்டு
இருளம்மையே இதோ வணக்கம்!!
ப்ரிய ஸ்நேகி ஸ்லோக்ஷ்ணா ராஜ்காரியர்
என்று பஸ் ரிக்கெற்றில் கவிதை எழுதிய
சுமனேஸ்வரனை மெற்றோவில் கண்டேன்
இந்தக்காலம்
அன்புடன் பண்புடன் தோழி சுலோசனா இராசகாரியர்
என்று லப்ரொப்பில் கவிதை தட்டிக்கொண்டிருந்தான்.
என்ன மச்சான்
ஸ்லோக்ஷ்ணா ராஜ்காரியருக்கு என்னடா ஆச்சுது?
நவீனம் பிந்தின கவிதைக்கு
முந்தின மாதிரி கிரந்தம் இருக்கப்படாது
ஆனா நிழல் கனக்கிற மாதிரி
இருண்மை வேணும் தோழர்
பின்நவீனத்தோழிக்கு என் வந்தனம் சொல்ல
வதனம் காணமுடியாத மாதிரிக்கு
மெற்றோவுக்குள்ளை அப்பின இருட்டு
இருளம்மையே இதோ வணக்கம்!!
புஷ்பராணி சாமர்த்தியப்பட்ட கவிதை
புஷ்பராணி சாமத்தியப்பட்ட கவிதை கேள்விப்பட்டு
புஷ்பத்தின்ரை தெரு தெரியாதவையும்
படலையைத் தள்ளிக்கொண்டு வந்து கேட்டினம்
எப்ப நடந்தது?
எப்ப சடங்கு?
சடங்கு நாங்கள் வைக்கிறதாய் இல்லை
புஷ்பம் அழுதாள்
எனக்குச் சடங்கு வைக்கோணும்
உன்ரை இஷ்டப்படி நடக்கேலாது
உது பெட்டையளை அடக்கிற விசயம்
சடங்கு வைக்கப்படாது
உவள் நினைச்சபடி நடக்கவிடமாட்டன்
உது வெக்கக்கேடெண்டு கவிதையள் எழுதியிருக்கிறன்
சடங்கு இருக்கப்படாது
நடந்துதோ இங்கை ஒரு கொலையே விழும்
சனம் சாகுது. ஆட்டக்காரிக்குச் சாமத்தியவீடாம்
சடங்கு நடக்கப்பிடாது
பிள்ளை இந்தக்காலத்துப்பெட்டை
சாமத்தியச்சடங்கு வெக்கக்கேடெண்டுறாள்.
வேண்டாமாம்.
வந்தவை சாமத்தியக்கவிதை முடியமுன்னம்
படலையைச் சாத்தாமப் போச்சினமாம்.
ப்ச்! இப்பத்தையப் பெட்டையள்!
கலாச்சாரத்தையே மறந்துபோட்டு ஆடுகிறாளுவை
அறைஞ்சனெண்டால், நாயே!
வெக்கமில்லையே உனக்கு?
சாமத்தியச்சடங்கு கேக்குதோ?
ஏன், ஊருக்கெல்லாம் அறிவிச்சுப்போட்டு
ஆரோடையும் ஓடிப்போகப்போறியே!
புஷ்பம் அழுதாள்
எனக்குச் சடங்கு வைக்கோணும்
புஷ்பராணி சாமத்தியப்பட்ட கவிதை கேள்விப்பட்டு
புஷ்பத்தின்ரை தெரு தெரியாதவையும்
படலையைத் தள்ளிக்கொண்டு உள்ளை வந்தினம்
புஷ்பத்தின்ரை தெரு தெரியாதவையும்
படலையைத் தள்ளிக்கொண்டு வந்து கேட்டினம்
எப்ப நடந்தது?
எப்ப சடங்கு?
சடங்கு நாங்கள் வைக்கிறதாய் இல்லை
புஷ்பம் அழுதாள்
எனக்குச் சடங்கு வைக்கோணும்
உன்ரை இஷ்டப்படி நடக்கேலாது
உது பெட்டையளை அடக்கிற விசயம்
சடங்கு வைக்கப்படாது
உவள் நினைச்சபடி நடக்கவிடமாட்டன்
உது வெக்கக்கேடெண்டு கவிதையள் எழுதியிருக்கிறன்
சடங்கு இருக்கப்படாது
நடந்துதோ இங்கை ஒரு கொலையே விழும்
சனம் சாகுது. ஆட்டக்காரிக்குச் சாமத்தியவீடாம்
சடங்கு நடக்கப்பிடாது
பிள்ளை இந்தக்காலத்துப்பெட்டை
சாமத்தியச்சடங்கு வெக்கக்கேடெண்டுறாள்.
வேண்டாமாம்.
வந்தவை சாமத்தியக்கவிதை முடியமுன்னம்
படலையைச் சாத்தாமப் போச்சினமாம்.
ப்ச்! இப்பத்தையப் பெட்டையள்!
கலாச்சாரத்தையே மறந்துபோட்டு ஆடுகிறாளுவை
அறைஞ்சனெண்டால், நாயே!
வெக்கமில்லையே உனக்கு?
சாமத்தியச்சடங்கு கேக்குதோ?
ஏன், ஊருக்கெல்லாம் அறிவிச்சுப்போட்டு
ஆரோடையும் ஓடிப்போகப்போறியே!
புஷ்பம் அழுதாள்
எனக்குச் சடங்கு வைக்கோணும்
புஷ்பராணி சாமத்தியப்பட்ட கவிதை கேள்விப்பட்டு
புஷ்பத்தின்ரை தெரு தெரியாதவையும்
படலையைத் தள்ளிக்கொண்டு உள்ளை வந்தினம்
Thursday, August 30, 2007
புடுங்கிகளின் காலம்
புல்
புடுங்கியாவது எப்போது?
மயிர்
புடுங்கியாவது எப்படி?
போர்ஹே புதுப்புடுங்கியானது எப்போது?
பிக்காஸோ புடுங்கினதுக்கு மறுநாள்
குரோஸோவா புடுங்குவதற்கு முதல்நாள்
போர்ஹே பொதுப்புடுங்கியானது எப்படி?
பழம்புடுங்கிகளைப் இழுத்துப் புடுங்கினதால்
புல் புடுங்கியாவது
புடுங்கும்போது
புடுங்கிகளின் காலம்
புடுங்குகாலம்
புடுங்கியாவது எப்போது?
மயிர்
புடுங்கியாவது எப்படி?
போர்ஹே புதுப்புடுங்கியானது எப்போது?
பிக்காஸோ புடுங்கினதுக்கு மறுநாள்
குரோஸோவா புடுங்குவதற்கு முதல்நாள்
போர்ஹே பொதுப்புடுங்கியானது எப்படி?
பழம்புடுங்கிகளைப் இழுத்துப் புடுங்கினதால்
புல் புடுங்கியாவது
புடுங்கும்போது
புடுங்கிகளின் காலம்
புடுங்குகாலம்
இரண்டு மலக்கவிதைகள்
மோகனுக்கு கவிஞனாக ஆசை வந்தது.
மோகன் என்றால் மோகமெல்லோ?
கவிஞனுக்குக் காதலி கிடைப்பாள்
கைதட்டும் விட்டுவிட்டுக் கிடைக்கும்
நிர்மலத்தின் உட்கூறு பிளந்து ஒரு கவிதை போட்டான்
ஆஹா என்றார்கள் சமயவாதிகள்
தன்மலத்தின் புறக்கூறு பிரித்து ஒரு கவிதை போட்டான்
ஓஹோ என்றார்கள் சமூகவாதிகள்
சமயவாதிகளும் சமூகவாதிகளும் நியாயவாதிகள்
சமயவாதி என்றால் மித்ரர். சமூகவாதி என்றால் தோழர்
ஆஹாவும் ஓஹோவும் அறிஞன் ஆக்கும்
அறிஞர் மோகன்
கவிதை?
முழங்காலால் முறித்து
குசினி அடுப்பில் போடு
அறிஞர் >>> கவிஞர்
தீ பரவட்டும்
மோகன் என்றால் மோகமெல்லோ?
கவிஞனுக்குக் காதலி கிடைப்பாள்
கைதட்டும் விட்டுவிட்டுக் கிடைக்கும்
நிர்மலத்தின் உட்கூறு பிளந்து ஒரு கவிதை போட்டான்
ஆஹா என்றார்கள் சமயவாதிகள்
தன்மலத்தின் புறக்கூறு பிரித்து ஒரு கவிதை போட்டான்
ஓஹோ என்றார்கள் சமூகவாதிகள்
சமயவாதிகளும் சமூகவாதிகளும் நியாயவாதிகள்
சமயவாதி என்றால் மித்ரர். சமூகவாதி என்றால் தோழர்
ஆஹாவும் ஓஹோவும் அறிஞன் ஆக்கும்
அறிஞர் மோகன்
கவிதை?
முழங்காலால் முறித்து
குசினி அடுப்பில் போடு
அறிஞர் >>> கவிஞர்
தீ பரவட்டும்
யாமினியின் காதல்
யாமினிக்கு சேகரனில் விருப்பம்
சேகரனுக்கும் யாமினியில்
கடிதம் மாற முன்னால்
காலம் மாறி களத்துக்கு வந்தான்
காதலியென்றால் கவலை வருந்தான்
காதலைப் கவி பாடக்கூடாதென்று
யாமினி கொடுத்துவிட்டாளாம்
ஒரு கடிதம்
போராளியென்றால் சாதலும் வரும்
சாதலைக் கவி பாடக்கூடாதென்று
சேகரும் கொடுத்துவிட்டான்
ஒரு கடிதம் என்று கேள்வி.
சேகரனுக்கும் யாமினியில்
கடிதம் மாற முன்னால்
காலம் மாறி களத்துக்கு வந்தான்
காதலியென்றால் கவலை வருந்தான்
காதலைப் கவி பாடக்கூடாதென்று
யாமினி கொடுத்துவிட்டாளாம்
ஒரு கடிதம்
போராளியென்றால் சாதலும் வரும்
சாதலைக் கவி பாடக்கூடாதென்று
சேகரும் கொடுத்துவிட்டான்
ஒரு கடிதம் என்று கேள்வி.
போரின் கவிதைகள்
போரின் கதைகளைப் போராளிகள் எழுதுகிறார்கள்
போரின் கவிதைகளை
பொறுக்கிப் போய்
ஊழ் காய்கிறவர்கள்
பாடுகிறார்கள்
போரின் கவிதைகளை
பொறுக்கிப் போய்
ஊழ் காய்கிறவர்கள்
பாடுகிறார்கள்