Saturday, November 3, 2007

கொழும்பில் அலையும் ப்ரமராக்ஷஸ்

ப்ரமா வேறு ராக்ஷஸ் வேறு
சரிதான். என்றாலும்
மூன்று ஸ்ரஸுடன் கொழும்பில் அலைகிறது ப்ரமராக்ஷஸ்

மார்க்ஸிய ஸ்ரஸு இடப்பக்கம்
மனிதநேய ஸ்ரஸு வலப்பக்கம்
மன்மத ஸ்ரஸு முன்னுக்கு

மறைத்துக் கிள்ளிய சதுஸ்ரத்து ஸ்ரஸுக்காய்
கொழும்பில் கொதித்து அலையும் ப்ரமராக்ஷஸே
திருமலையிலும் குதி மிதித்துத் தேடிப் பார்ப்பாயா?

விடுமுறைக்குச் சொந்த ஸ்ரஸாய்
வீடு கொண்டு போயிருக்கலாம்
கிள்ளிய ஆள் சனி

Friday, August 31, 2007

ஸ்லோக்ஷ்ணா ராஜ்காரியரைக் கொன்றது ஏன்?

அந்தக்காலம்
ப்ரிய ஸ்நேகி ஸ்லோக்ஷ்ணா ராஜ்காரியர்
என்று பஸ் ரிக்கெற்றில் கவிதை எழுதிய
சுமனேஸ்வரனை மெற்றோவில் கண்டேன்

இந்தக்காலம்
அன்புடன் பண்புடன் தோழி சுலோசனா இராசகாரியர்
என்று லப்ரொப்பில் கவிதை தட்டிக்கொண்டிருந்தான்.


என்ன மச்சான்
ஸ்லோக்ஷ்ணா ராஜ்காரியருக்கு என்னடா ஆச்சுது?

நவீனம் பிந்தின கவிதைக்கு
முந்தின மாதிரி கிரந்தம் இருக்கப்படாது
ஆனா நிழல் கனக்கிற மாதிரி
இருண்மை வேணும் தோழர்


பின்நவீனத்தோழிக்கு என் வந்தனம் சொல்ல
வதனம் காணமுடியாத மாதிரிக்கு
மெற்றோவுக்குள்ளை அப்பின இருட்டு

இருளம்மையே இதோ வணக்கம்!!

புஷ்பராணி சாமர்த்தியப்பட்ட கவிதை

புஷ்பராணி சாமத்தியப்பட்ட கவிதை கேள்விப்பட்டு
புஷ்பத்தின்ரை தெரு தெரியாதவையும்
படலையைத் தள்ளிக்கொண்டு வந்து கேட்டினம்
எப்ப நடந்தது?
எப்ப சடங்கு?



சடங்கு நாங்கள் வைக்கிறதாய் இல்லை



புஷ்பம் அழுதாள்
எனக்குச் சடங்கு வைக்கோணும்


உன்ரை இஷ்டப்படி நடக்கேலாது
உது பெட்டையளை அடக்கிற விசயம்
சடங்கு வைக்கப்படாது

உவள் நினைச்சபடி நடக்கவிடமாட்டன்
உது வெக்கக்கேடெண்டு கவிதையள் எழுதியிருக்கிறன்
சடங்கு இருக்கப்படாது

நடந்துதோ இங்கை ஒரு கொலையே விழும்
சனம் சாகுது. ஆட்டக்காரிக்குச் சாமத்தியவீடாம்
சடங்கு நடக்கப்பிடாது


பிள்ளை இந்தக்காலத்துப்பெட்டை
சாமத்தியச்சடங்கு வெக்கக்கேடெண்டுறாள்.
வேண்டாமாம்.


வந்தவை சாமத்தியக்கவிதை முடியமுன்னம்
படலையைச் சாத்தாமப் போச்சினமாம்.
ப்ச்! இப்பத்தையப் பெட்டையள்!
கலாச்சாரத்தையே மறந்துபோட்டு ஆடுகிறாளுவை



அறைஞ்சனெண்டால், நாயே!
வெக்கமில்லையே உனக்கு?
சாமத்தியச்சடங்கு கேக்குதோ?
ஏன், ஊருக்கெல்லாம் அறிவிச்சுப்போட்டு
ஆரோடையும் ஓடிப்போகப்போறியே!



புஷ்பம் அழுதாள்
எனக்குச் சடங்கு வைக்கோணும்



புஷ்பராணி சாமத்தியப்பட்ட கவிதை கேள்விப்பட்டு
புஷ்பத்தின்ரை தெரு தெரியாதவையும்
படலையைத் தள்ளிக்கொண்டு உள்ளை வந்தினம்

This page is powered by Blogger. Isn't yours?